கணேஷ் நகரில் புதிய மின்மாற்றத்தை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார்.

கணேஷ் நகரில் புதிய மின்மாற்றத்தை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாநகரம் - திரவிய ரத்தின நகர், கணேஷ் நகர், NGO காலனி, ஸ்ரீராம் நகர், செல்சீலி காலனி ஆகிய பகுதிகளில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக அடிக்கடி மின்வெட்டி ஏற்பட்டது இதைத் தொடர்ந்து அந்த பகுதி மக்கள் அமைச்சர் கீதா ஜீவனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர இந்த மனு மீது அமைச்சர் கீதா ஜீவன் உடனடியாக நடவடிக்கை எடுக்க மின்வாரியத்திற்கு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து திரவிய ரத்தின நகர் என் ஜி ஓ காலனி ஸ்ரீராம் நகர் செல்ஜிலி காலனி ஆகிய பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றிகளை மக்கள் பயன்பாட்டிற்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் அவர்கள் துவக்கி வைத்தார். இது தொடர்ந்து அந்த பகுதி மக்கள் அமைச்சர் கீதா ஜீவனுக்கு நன்றி தெரிவித்தனர். உடன் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு அபிராமிநாதன் பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் இசக்கி ராஜா, சரவணகுமார், வைதேகி, வட்டச் செயலாளர்கள் மூக்கையா, பொன் பெருமாள், வட்ட அவைத் தலைவர்கள் பெரியசாமி, சிவனனைந்த பெருமாள், செல்வம், வட்டப் பிரதிநிதிகள் கணேசன், பேச்சிராமன், சோமு, ராஜேஷ், கணேசன், ராஜேந்திரன், மாநகர இலக்கிய அணி தலைவர் சக்திவேல், மாநகர மாணவர் அணி துணை அமைப்பாளர் கார்த்திக், மாநகர விவசாய அணி துணை அமைப்பாளர் முருகானந்தம், இளைஞரணி நிர்வாகிகள் ராஜா, ஹரிசங்கர், வழக்கறிஞர் அணி செல்வ லட்சுமி, தகவல் தொழில்நுட்ப அணி பரத், நெசவாளர் அணி இசக்கி துரை, பாக முகவர்கள் ஞானபிரகாசம், ராஜ்குமார், வட்ட நிர்வாகிகள் கருப்பசாமி, சாந்தகுமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.
Next Story