குண்டும் குழியுமான சாலை: கண்டுகொள்ளாத மாநகராட்சி அதிகாரிகள்!

குண்டும் குழியுமான சாலை: கண்டுகொள்ளாத மாநகராட்சி அதிகாரிகள்!
X
தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி, மில்லர்புரம் கிழக்கு பகுதியில் உள்ள சாலை பல ஆண்டுகளாக சீரமைக்காமல் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்வதில் இடையூறு ஏற்பட்டு, பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றன. இதன் மிக அருகில் மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகம் உள்ளது. சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் அதனை கண்டு கொள்ளாமல் அலட்சியப்படுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story