வேளாண்மை பல்கலைக்கழகத்தில் முதுகலை, முனைவர் படிப்பு சேர்க்கை தொடக்கம் !

வேளாண்மை பல்கலைக்கழகத்தில் முதுகலை, முனைவர் படிப்பு சேர்க்கை தொடக்கம் !
X
2025–26 கல்வியாண்டுக்கான விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 2025–26 கல்வியாண்டுக்கான முதுகலை மற்றும் முனைவர் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இன்று தொடங்கியது. மொத்தம் 34 துறைகளில் முதுகலை, 29 துறைகளில் முனைவர் பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன. மாணவர்கள் https://admissionsatpgschool.tnau.ac.in/ இணையதளத்தின் மூலம் நவம்பர் 10 வரை விண்ணப்பிக்கலாம். தற்போது இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் முந்தைய பருவ மதிப்பெண் சான்றிதழ்களை இணைத்து விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
Next Story