மேட்டுப்பாளையம் டவுன் பஸ் நடுவழியில் பழுதடைந்து பயணிகள் அவதி !

மேட்டுப்பாளையம் டவுன் பஸ் நடுவழியில் பழுதடைந்து பயணிகள் அவதி !
X
பாதியில் பழுதடைந்த அரசு டவுன் பஸ் – பயணிகள் அவதி.
மேட்டுப்பாளையத்தில் இருந்து தோலம்பாளையம் நோக்கி இயக்கப்படும் அரசு டவுன் பஸ், நேற்று மேட்டுப்பாளையம் நோக்கி திரும்பும் வழியில் தேக்கம்பட்டி அருகே திடீரென பழுதடைந்தது. இதனால் பஸ் நடுரோட்டில் நின்று, பயணிகள் கடும் அவதியடைந்தனர். சிலர் நடந்து தங்கள் இடங்களுக்கு சென்றனர். தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் தாசில்தார் ராமராஜ், போக்குவரத்து கழக நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, மாற்று பஸ் ஏற்பாடு செய்யப்பட்டு பயணிகள் அனுப்பப்பட்டனர்.
Next Story