கோவை: மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு !

X
கடந்த சில நாட்களாக மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்து வந்தது. நேற்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், மாலை நேரத்தில் திடீரென வானம் கருமேகம் சூழ்ந்தது. பின்னர் இரவு நேரத்தில் மேட்டுப்பாளையம், கல்லாறு, சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் தொடர்ந்து பெய்த கனமழையால் சாலைகளில் நீர் தேங்கியது. இதன் போது மேட்டுப்பாளையம் தாசில்தார் அலுவலகம் முன்பு மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் போக்குவரத்து தடைப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் அனில்குமார் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து மரத்தை மின்வாள் மூலம் வெட்டி அகற்றினர். பின்னர் சாலைப் போக்குவரத்து மீண்டும் சீரானது.
Next Story

