பல்பொருள் அங்காடியில் போலி "டீ" தூள் பாக்கெட்டுகள் பறிமுதல்

X
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுல் உள்ள பல்பொருள் அங்காடியில் தரம் குறைந்த டீத்துள்களை AVT டீ பாக்கெட்டுகள் பெயரில் போலியாக விற்பனை செய்வதாக AVT- டீத்தூள் தயாரிப்பு நிறுவனத்தில் மேலாளராக பணிபுரியும் சென்னையை சேர்ந்த குமாரவேல் (50) திண்டுக்கல் மாவட்ட அறிவுசார் சொத்துரிமை அமலாக்கபிரிவில் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஜப்லா தலைமையிலான போலீசார் சோதனை நடத்தியதில் போலி டீ தூள் பாக்கெட்டுகள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு அதனை பறிமுதல் செய்யப்பட்டன. கடை உரிமையாளரான வத்தலகுண்டு-வை சேர்ந்த முகமதுஇப்ராகிம் (40) என்பவரிடம் அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

