காட்டூர் பிரிவில் டூ வீலர் ட்ராவலர் வேன் நேருக்கு நேர் மோதி விபத்து.

காட்டூர் பிரிவில் டூ வீலர் ட்ராவலர் வேன் நேருக்கு நேர் மோதி விபத்து.
காட்டூர் பிரிவில் டூ வீலர் ட்ராவலர் வேன் நேருக்கு நேர் மோதி விபத்து. கரூர் மாவட்டம் வாங்கல் அருகே நல்ல குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி வயது 62. இவர் செவ்வாய்க்கிழமை அன்று மாலை 6:45 மணி அளவில் வாங்கல் பகுதியில் இருந்து தளவா பாளையம் செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்றார். இவரது வாகனம் காட்டூர் பிரிவு பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது எதிர் திசையில் திருச்சி மாவட்டம் முசிறி பகுதியை சேர்ந்த கார்த்தி என்பவர் வேகமாக ஓட்டி வந்த ட்ராவலர் வேன் பழனிசாமி ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த பழனிச்சாமியை மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த பழனிசாமியின் மகள் சாந்தி வயது 37 என்பவர் அளித்த புகாரின் பேரில் டிராவலர் வேனை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய கார்த்தி மீது வாங்கல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story