ஆட்டோகளில் கியூஆர் கோடு எஸ் பி தொடங்கி வைத்தார்

ஆட்டோகளில் கியூஆர் கோடு எஸ் பி தொடங்கி வைத்தார்
X
மார்த்தாண்டம்
மார்த்தாண்டத்தில் ஆட்டோகளுக்கு கியூ ஆர் கோடு ஒட்டும்  நிகழ்ச்சி தொடக்க விழா நேற்று வியாழக்கிழமை பஸ் நிலையம் முன்பு நடந்தது. நிகழ்ச்சியை குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  இந்த நிகழ்ச்சியில் மார்த்தாண்டம் போலீஸ் துணை  சூப்பிரண்டு நல்ல சிவம், குழித்துறை நகராட்சி தலைவர் பொன்.ஆசைதம்பி மற்றும் ஊர் காவல் படை உதவி கமிஷனர் பிரகாஷ் குமார், மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி உதய ரேகா உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால் போலீஸ் நிலையம், மருத்துவமனை உள்ளிட்ட அவசர நம்பர்கள் காணப்படும் என மாவட்ட எஸ்பி தெரிவித்தார்.
Next Story