குமரி : முன்னாள் பெண் கவுன்சிலர் உடல் தானம்

குமரி : முன்னாள் பெண் கவுன்சிலர் உடல் தானம்
X
வில்லுக்குறி
குமரி மாவட்டம் மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயம் தென்மேற்கு மண்டலம் 7-வது அன்பியத்தை சேர்ந்தவர் லூகாஸ் (67). இவரது மனைவி மேரி குளோரிபாய் (65). இவர் வில்லுக்குறி பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் ஆவார். உடல்நல குறைவால் நேற்று மேரி குளோரிபாய் இறந்தார்.  அவரது கண்களை தானமாக வழங்க அவர் ஏற்கனவே பதிவு செய்து இருந்தார். இதையடுத்து மருத்துவர் குழுவினர் வரவழைக்கப்பட்டு அவரது 2 கண்களும் தானமாக பெறப்பட்டது.  இதை அடுத்து அவரது உடலை இறுதி திருப்பலிக்கு பிறகு மருத்துவ கல்லூரிக்கு ஒப்படைக்க உறவினர்கள் முன்னிலையில் முடிவு செய்யப்பட்டது.  மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயத்தில் இறுதி ஆராதனை திருப்பலி நேற்று மாலை அருட்பணி மரிய ராஜேந்திரன் தலைமையில், செட்டிச்சார்விளை பங்கு பணி பிரித்விதாமஸ் முன்னிலையில் நடந்தது. திருப்பலி முடிந்து குளோரிபாய் உடலை அர்ச்சித்து மருத்துவக் கல்லூரி ஊழியர்களிடம் ஒப்படைத்தார். பின்னர் உறவினர்கள் முன்னிலையில் மருத்துவகல்லூரியில் உடல் ஒப்படைக்கப்பட்டது.
Next Story