கிருஷ்ணராயபுரம் - தனியார் பள்ளி பேருந்து திடீரென பிரேக் இட்டதால் டூ வீலர் மோதி விபத்து.

கிருஷ்ணராயபுரம் - தனியார் பள்ளி பேருந்து திடீரென பிரேக் இட்டதால் டூ வீலர் மோதி விபத்து.
கிருஷ்ணராயபுரம் - தனியார் பள்ளி பேருந்து திடீரென பிரேக் இட்டதால் டூ வீலர் மோதி விபத்து. நாகப்பட்டினம் மாவட்டம் கோதூர் வடகரை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திபன் வயது 31. இவர் வியாழக்கிழமை அன்று கரூர்- திருச்சி சாலையில் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே தனது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது கரூர் மாவட்டம் மகாதானபுரம் தீதம்பாளையம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் வயது 40 என்பவர் வேகமாக ஓட்டி வந்த தனியார் பள்ளி பேருந்தை கார்த்திபன் ஓட்டிச் சென்ற டூவீலரை முந்தி சென்றது. முன்னாள் சென்ற பள்ளி பேருந்து திடீரென எவ்வித சிக்னலும் வெளிப்படுத்தாமல் பிரேக் இட்டதால் பின்னால் சென்ற கார்த்திபன் டூவீலர் பள்ளி பேருந்து பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தலையில் படுகாயம் அடைந்த கார்த்திபனை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக கார்த்திபன் அளித்த புகாரில் தனியார் பள்ளி பேருந்தை சாலை விதிகளுக்கு புறம்பாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய விஜயகுமார் மீது மாயனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story