ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்!

ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்!
X
தலைக்காட்டுபுரம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்!
விளாத்திகுளம் அருகே தலைக்காட்டுபுரம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், தலைக்காட்டுபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் கழுகாசலபுரம்,ராமனூத்து, படர்ந்தபுளி, தலைக்காட்டுபுரம்,நீராவிபுதுப்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் பார்வையிட்டு வேளாண்மை துறை சார்பில் விதைப்பைகள், தார்ப்பாய் மற்றும் மருத்துவத் துறை சார்பில் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் உள்ளிட்டவை வழங்கினார். இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல், எட்டயபுரம் வட்டாட்சியர் சுதா, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள்,துறை சார்ந்த அதிகாரிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story