நகராட்சி சார்பில் நலத்திட்ட பணிகளுக்கு பூமி பூஜை ஈரோடு எம்.பி, மாவட்ட தி,மு.க. செயலர் பங்கேற்பு

X
Komarapalayam King 24x7 |10 Oct 2025 6:26 PM ISTகுமாரபாளையம் பகுதியில் நகராட்சி சார்பில் நடந்த நலத்திட்ட பணிகளுக்கு பூமி பூஜை விழாவில் ஈரோடு எம்.பி, மற்றும் மாவட்ட தி,மு.க. செயலர் உள்பட பலர் பங்கேற்றனர்.
குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட மக்களுக்கு நகராட்சி மூலம் காவேரி நகர் பத்ரகாளியம்மன் கோவில் ஆற்றங்கரையிலிருந்து நீரேற்று நிலையம் மூலம் பெறப்பட்ட தண்ணீரை சுத்திகரிப்பு செய்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குடிநீருக்காக நீர் உறிஞ்சப்படும் இடத்தில் சாயக்கழிவு நீர் கலப்பதாகவும் கோடைக்காலங்களில் வறண்டு இருப்பதால் குடிநீர் விநியோகம் தடைபட்டு வருகின்றது. தூய்மையான குடிநீர் மற்றும் தங்கு தடையின்றி கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனை நிறைவேற்றும் வகையில் நகர் மன்றத் தலைவரின் முயற்சியால், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 15.50 கோடி மதிப்பீட்டில் புள்ளாக்கவுண்டம்பட்டி பகுதியில் புதியதாக நீரேற்று நிலையம் அமைத்து, காவேரி நகர் சுத்திகரிப்பு நிலையம் வரை பைப் லைன் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை விழா, பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் வணிக வளாக கட்டிட பூமி பூஜை 1.90 கோடி ரூபாய் மதிப்பிலும், தார்சாலை பணிகள் இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலும் பூமி பூஜை போடப்பட்டது. இதில் நகராட்சி தலைவர், வடக்கு தி.மு.க. நகர பொறுப்பாளர் விஜய்கண்ணன் தலைமை வகிக்க, ஈரோடு எம்.பி. பிரகாஷ் மாவட்ட தி.மு.க. செயலர் மூர்த்தி சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தனர். நகர்மன்ற துணைத் தலைவர் வெங்கடேசன், தலைமை சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் மாணிக்கம், நகராட்சி ஆணையாளர் ரமேஷ், தெற்கு நகர பொறுப்பாளர் ஞானசேகரன், மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story
