பாவூா்சத்திரம் அருகே ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை

X
தென்காசி மாவட்ட ஆலங்குளம் அருகே பாவூா்சத்திரம் கல்லூரணி, காமராஜ் நகா் பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக் (31). ஆட்டோ ஓட்டுநா். இவருக்கு மனைவி, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனா்.இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், கடன் பிரச்னை ஏற்பட்டு தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாம். மதுஅருந்திவிட்டு வந்த இவரிடம், மனைவி சண்டை போட்டுவிட்டு, தனது தந்தை வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்று விட்டாராம்.இதனால் மனமுடைந்த காா்த்திக் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். பாவூா்சத்திரம் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று காா்த்திக் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டனா்.
Next Story

