அரசு பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

X
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே மத்திய மாநில அரசு பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட அமைப்பாளர் ஜெயசீலன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநிலத் துணைச் செயலாளர் ஜான்போர் ஜியா கோரிக்கை விளக்க உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் அனந்தராமன், செயலாளர் அய்யர், மாவட்டச் செயலாளர் கேசவன், அமல்ராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பென்ஷன் வேளிடேஷன் சட்ட மசோதாவை உடனடியாக ரத்து செய்யக் கோரியும், எட்டாவது ஊதிய குழுவை உடனடியாக அமைத்து ஓய்வூதியர்கள் அனைவருக்கும் அதன் பலன்களை வழங்கிட கோரியும் மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுப்பிரமணியன், மருதை நன்றியுரை வழங்கினர்.
Next Story

