உழவர் நலத்துறை திட்டம் நிகழ்ச்சி

உழவர் நலத்துறை திட்டம் நிகழ்ச்சி
X
கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டாரம் இராமபுரம் கிராமம் உழவரைத் தேடி வேளாண் உழவர் நலத்துறை திட்டம் நிகழ்ச்சி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் நடைபெற்றது. இந்நிக்ச்சியில் விவசாயம் சம்மந்தமான அனைத்து துறைகளும் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு பயன்தரும் வகையில் சிறப்புரையா ற்றினர். இந்நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் திரு.சுனில்தத் அவர்கள் முன்னிலை வகித்து உர மேலாண்மை குறித்தும் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்தும் விவசாயிகளுக்கு விரிவுரை வழங்கினார். மேலும் நெல் மகசூலை பாதிக்கும் குறித்து பூச்சி, இலை சுருட்டு புழு, வால் நெல் ஆகியவற்றிற்கான மேலாண்மை தொழில்நுட்பங்களை எடுத்துரைத்தார். மேலும் அகஸ்தீஸ்வரம் வட்டார வேளாண்மை அலுவலர் ரக்ஷனா அவர்கள் நடப்பாண்டில் வேளாண்மை துறை மூலம் செயல்படவுள்ள திட்டங்கள் பற்றி விளக்கினார். இதனை தொடர்ந்து தோட்டக்கலை உதவி அலுவலர் திரு. தர்மராஜ் அவர்கள் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்களை எடுத்துரைத்தார். பட்டு வளர்ச்சி துறை உதவி ஆய்வாளர் செல்லையா பட்டு பூச்சி வளர்ப்பதால் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்து கூறினார். வேளாண்மை வணிக துறையின் மூலம் ஒழுங்குமுறை விற்பணைகூடத்தின் மேற்பார்வையாளர் ராம்ஷங்கர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் பலன்கள் குறித்து எடுத்துரைத்தார். இக்கூட்டத்தில் 30திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பலநடந்தனர்
Next Story