கரூர் அருள்மிகு கல்யாணம் வெங்கட ரமண சுவாமி திருக்கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்.
கரூர் அருள்மிகு கல்யாணம் வெங்கட ரமண சுவாமி திருக்கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம். புரட்டாசி மாதத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் பெருமாள் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெறுவது வழக்கம். கரூரில் பிரசித்தி பெற்ற தென் திருப்பதி என்று அழைக்கப்படும் அருள்மிகு கல்யாண வெங்கட ரமண சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி மாதத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் பக்தர்கள் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்வது வழக்கம். இன்று நான்காவது புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு கரூர் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இன்று தாந்தோணி மலை கல்யாண வெங்கட ரமண சுவாமி திருக்கோவில் சாமி தரிசனம் செய்ய வந்தனர். கூட்டம் அதிகமாக இருந்தால் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Next Story





