ஜல் ஜீவன் திட்ட பைப்புகள் எரிந்து சாம்பல்

ஜல் ஜீவன் திட்ட பைப்புகள் எரிந்து சாம்பல்
X
குழித்துறை
குமரி மாவட்டம் கழுவன்திட்டை பகுதியில் குழித்துறை  நகராட்சி சொந்தமான மேல்நிலைத் தொட்டி உள்ளது. இந்த பகுதியில் தற்போது மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டம் கொண்டுவரப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றது.  அதன் பிறகு இந்த திட்டத்தில் மீதி வந்த ஏராளமான பிவிசி பைப்புகளை காண்ட்ராக்டர் அந்த பகுதியில் குவித்து வைத்திருந்தார். இந்த நிலையில் நேற்று அந்த பகுதியில் திடீரென தீப்பிடித்து பிவிசி பைப்புகள் அனைத்தும் எரிந்து சாம்பலானது. குழித்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயணைப்பு அதிகாரி சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இதனால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
Next Story