தேசிய பெண் குழந்தை விருது பெற அழைப்பு

X
புதுகை மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு புதுகை மாவட்டத்தில் பெண் குழந்தை களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய் யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களை தடுக்கவும் பாடுபட்டு, வீரதீர செயல் புரிந்த 18 வயதுக்கு உட் பட்ட பெண் குழந்தைகளுக்கு தேசிய பெண் குழந்தை தின விருதுக்கான பாராட்டு பத்திரமும், ரூ.ஒரு லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்படவுள்ளது. 13 வயதுக்கு மேல் 18 வயதுக்கு உட்பட்ட தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட பெண் குழந்தைகள்விருதுக்கு விண்ணப்பிக்கலாம். (https://awards. tn.gov.in)என்ற இணையதள முகவரியில் நவம்பர் 20ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்து, பதிவேற்றம் செய்த படிவத்தை உரிய ஆவணங்களுடன் அதற்கான கருத் துருவை மாவட்ட சமூக நல அலுவல கத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை 04322 222270 தொலை பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story

