கோவை: சூலூர் அருகே வடமாநில இளைஞர் மர்ம மரணம் !

கோவை: சூலூர் அருகே வடமாநில இளைஞர் மர்ம மரணம் !
X
கண்டெடுக்கப்பட்ட சடலம்: தலையில் காயங்கள் - பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீஸ்.
கோவை மாவட்டம், சூலூரை அடுத்த குரும்பாளையத்தில் உள்ள மேக்னா ஏஜென்சி எதிரே சுமார் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத வடமாநில இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அளித்த தகவலின் பேரில் சூலூர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். இறந்தவரின் தலையில் சிறிய காயம் மற்றும் உடலில் சில காயங்கள் இருந்தன. சடலத்தை உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், வழக்குப் பதிவு செய்து இந்த மர்ம மரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story