கோவை: பெட்ரோல் பங்க் ஊழியர் வெட்டிக் கொலை !

X
கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் நேற்று இரவுப் பணியில் இருந்த சந்தோஷ் என்ற இளைஞர், மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூலூர் சித்தநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ், சூலூர் அருகேயுள்ள பெட்ரோல் பங்கில் இரவுப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மர்ம நபர்கள் திடீரெனப் பங்க்கினுள் நுழைந்து அவரைக் கடுமையாகத் தாக்கி வெட்டிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த சந்தோஷ் அங்கேயே உயிரிழந்தார். சத்தம் கேட்டு வந்த அருகில் இருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சூலூர் காவல்துறையினர், சந்தோஷின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலைச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், மர்ம நபர்கள் மற்றும் கொலைக்கான காரணம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் நடந்த இச்சம்பவம் சூலூர் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story

