பெருங்குடியில் கிராம சபை கூட்டம்

மதுரை அருகே பெருங்குடியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் பெருங்குடி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் இன்று ( அக்.11)சமுதாய கூடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆதிதிராவிட துணை ஆட்சியர் ராமகிருஷ்ணன் தலைமையில் உதவி பொறியாளர் மணிமாறன். ஊராட்சி செயலாளர் அழகு முன்னிலையில் சுகாதார பணியாளர்கள். செவிலியர்கள். ரேஷன் கடை ஊழியர்கள்கிராம பெரியேர்கள் பொதுமக்கள் உள்பட 50க்கு மேற்ப்பட்டவர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் அடிப்படை வசதிகள் மின்வசதி. குடிநீர் வசதி கழிப்பிடம். கால்வாய்.தெருக்களில் சாதி பெயர்கள்,. 100 நாள் வேலை திட்டம், டெங்கு காய்ச்சல், பருவமழை முன் எச்சரிக்கைகள், குறித்து விவாதிக்கப்பட்டது மேலும் பொதுமக்கள் குறைநிறைவகள் பற்றி கருத்துக்களை அதிகாரிகள் கேட்டறிந்தனர்.
Next Story