போலி லாட்டரி விற்ற வழக்கில் மூவர் கைது

போலி  லாட்டரி விற்ற வழக்கில் மூவர்   கைது
X
குமாரபாளையத்தில் போலி லாட்டரி விற்ற வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டனர்.
குமாரபாளையத்தில் போலி லாட்டரி விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. பிரபாகர் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். குமாரபாளையம் சடையம்பாளையம், ஆனங்கூர் சாலை, ராஜம் தியேட்டர் முன்பு ஆகிய பகுதியில் லாட்டரி விற்பது தெரியவந்தது. நேரில் சென்ற போலீசார், போலி லாட்டரி விற்ற அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளிகள் ஈஸ்வரன், 55, மாதேஸ், 42, ஹரிஹரன், 43, ஆகிய மூன்று நபர்களை கைது செய்து, போலி லாட்டரி டிக்கெட்டுக்களை பறிமுதல் செய்தனர்.
Next Story