ஆதிமூல வெங்கட்ரமண சாமி கோவிலில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி மாத சனிக்கிழமையை யொட்டி பெருமாள் கோவில்களில் நடைபெறும் சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் விரதம் இருந்து வழிபாடு நடத்துவது வழக்கமாகும். அதன்படி இந்தாண்டு புரட்டாசி மாத 4-வது சனிக்கிழமையையொட்டி தர்மபுரி பகுதியில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் அதிகாலை முதல் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று மதியம் 11 மணியளவில் மூக்கனூர் அக்கமணஹள்ளி ஸ்ரீ ஆதிமூல வெங்கட்ரமண சாமி கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் சாமிக்கு தங்கக்கவசம் சாத்நப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது. விழாவையையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.இந்த வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
Next Story





