பெரம்பலூர் விளையாட்டு அலுவலர் மீது பெற்றோர் புகார்
பெரம்பலூர் மாவட்டத்தில் காலை 07.30 மணிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று நடைபெற்ற மிதி வண்டி போட்டிக்கு, முறையாக தகவல் தெரிவிக்காமல் காலை 7 மணிக்கு நிகழ்ச்சி நடத்தினால் எப்படி மேடம் மாணவ, மாணவிகள் வர முடியும். மாணவ,மாணவிளுக்கும், பெற்றோர்களுக்கும் தகவல் சென்று சேரவில்லை. கடந்த வருடம் மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். ஆனால் இந்த வருடம் முறையாக தகவல் தெரிவிக்காமல், குறைந்த அளவில் கலந்து கொண்டுள்ளனர். மாவட்ட விளையாட்டு அதிகாரியால் அவசர கதியில் நடத்திய மிதி வண்டி நிகழ்ச்சியால் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் அதிருப்தி. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், தலைமைச் செயலாளர் அவர்களுக்கும் பெற்றோர்கள் சார்பில் புகார் அனுப்பப்பட்டுள்ளது.
Next Story



