கரூர்-அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி ஆலயத்தில் அதிமுக சார்பில் அன்னதானம்.

கரூர்-அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி ஆலயத்தில் அதிமுக சார்பில் அன்னதானம்.
கரூர்-அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி ஆலயத்தில் அதிமுக சார்பில் அன்னதானம். தமிழகத்தின் தென் திருப்பதி என அழைக்கப்படும் கரூர் தாந்தோணி மலை அருள்மிகு கல்யாண வெங்கட சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி மாதத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் சிறப்பு வழிபாடு நடைபெறும்.இந்த நாட்களில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வார்கள். இன்று புரட்டாசி மாத 4வது சனிக்கிழமை என்பதால் வழக்கத்தை விட இன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனை தொடர்ந்து கரூர் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தலைமையில் கோவில் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கிவிட்டு பின்னர் அவர்களுடனும் அதிமுக கட்சி நிர்வாகிகளுடனும் அமர்ந்து அன்னதானம் உட்கொண்டார் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர்.
Next Story