விபத்துல்லா திருப்பூர் உருவாக்குவோம் பல்லடத்தில் ஏ டி எஸ் பி சூளுரை

விபத்துல்லா திருப்பூர் உருவாக்குவோம் பல்லடத்தில் ஏ டி எஸ் பி சூளுரை
X
விபத்துல்லா திருப்பூர் உருவாக்குவோம் பல்லடத்தில் நடைபெற்ற தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வு பேரணியில் ஏடிஎஸ்பி சூளுரை.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் என். ஜி.ஆர் சாலையில் துவங்கி பணப்பாளையம் முதல் அண்ணா நகர் வரை பல்லடம் நகர் பகுதிகளில் இருசக்கர வாகன பேரணி காவல்துறையினர் மற்றும் இருசக்கர வாகன பழுது பார்ப்போர் சங்கத்தின் இணைந்து உயிர் பாதுகாப்பு ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. டிஎஸ்பி சுரேஷ் தலைமையில் ஆய்வாளர்கள் மாதையன் மற்றும் பிரபாகரன் ஆகியோர் ஏற்பாட்டில் விழிப்புணர்வு பேரணி ஏடிஎஸ்பி துவக்கி வைத்து நடைபெற்றது முன்னதாக பேசிய ஏடிஎஸ்பி ராஜேந்திரன் திருப்பூரை விபத்து இல்லாத திருப்பூர் ஆக்குவதே தற்போது தங்களுடைய இலக்காக செயல்பட்டு வருவதாகவும் மேலும் ஹெல்மெட் அணியாமல் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காமல் வாகனத்தை இயக்குவதால் விபத்து அதிகரித்து வருகிறது ஆகவே ஒவ்வொருவரும் குடும்பத்தை நினைத்து குடும்பத்தின் நிலையை அறிந்து வாகனத்தில் பயணிக்க வேண்டும் அதிவேகமாக பயணிக்க கூடாது என்று திருப்பூர் மாவட்டம் விரைவில் விபத்து இல்லாத மாவட்டமாக ஆக்குவதில் தற்போது திருப்பூர் மாவட்ட காவல்துறை முனைப்புடன் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார் நிகழ்ச்சியில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் பார்த்திபன் மற்றும் தலைமை காவலர்கள் ஆனந்தன் கௌதம் ஒளித்து ஏராளமானோர் பங்கேற்றனர்
Next Story