வீரராக்கியம்-மதுப்பழக்கத்தால் ஏற்பட்ட விபரீதம். மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு.
வீரராக்கியம்-மதுப்பழக்கத்தால் ஏற்பட்ட விபரீதம். மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு. கரூர் மாவட்டம் வீரராக்கியம் அருகே சின்னமநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் வயது 53. அண்மைக்காலமாக இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததால் உடல்நலம் குன்றி அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் வியாழக்கிழமை அன்று காலை 6:30 மணி அளவில் பாலசுப்பிரமணியன் வீரராக்கியம் ரயில்வே கேட் அருகே நடந்து சென்றபோது திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சையில் இருந்து வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்த பாலசுப்பிரமணியன் மனைவி ரம்யா வயது 47 என்பவர் அளித்த புகாரில் மாயனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story





