அரவக்குறிச்சி -வாருங்கள் கற்றுக் கொள்ளலாம்-தீயணைப்பு துறை சார்பில் பொதுமக்களுக்கு இலவச தீ பாதுகாப்பு பயிற்சி.

அரவக்குறிச்சி -வாருங்கள் கற்றுக் கொள்ளலாம்-தீயணைப்பு துறை சார்பில் பொதுமக்களுக்கு இலவச தீ பாதுகாப்பு பயிற்சி.
அரவக்குறிச்சி -வாருங்கள் கற்றுக் கொள்ளலாம்-தீயணைப்பு துறை சார்பில் பொதுமக்களுக்கு இலவச தீ பாதுகாப்பு பயிற்சி. தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் இயக்குனர் உத்தரவின்பேரில் "வாருங்கள் கற்றுக்கொள்வோம் – தீ பாதுகாப்பு அறிவோம் – உயிர்களை காப்போம்" என்ற திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் பொதுமக்களுக்கு தீ பாதுகாப்பு பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது. இதற்கான அக்டோபர் 10, 11 மற்றும் 12 தேதிகளில் தமிழ்நாட்டின் அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் ஒரே நேரத்தில் நடைபெற்று வருகிறது. கரூர் மாவட்டத்தில் கரூர், புகழூர், அரவக்குறிச்சி மற்றும் திருச்சி மாவட்டம் முசிறி ஆகிய நான்கு தீயணைப்பு நிலையங்களிலும் இந்த பயிற்சி திட்டம் நடைபெறுகிறது. எந்தவித கட்டணமும் அல்லது முன்பதிவும் இன்றி பொதுமக்கள் நேரடியாக கலந்துக் கொள்ளும் வகையில் இந்த சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரண்டு நாள் சேர்த்து மொத்தம் ஆறு பயிற்சி அமர்வுகள் நடத்தப்படுகின்றன. இன்று மட்டும் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தீயணைப்பு நிலையத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு தீ எப்படி உருவாகிறது? அதை நாம் எப்படி கையாள வேண்டும் ? என்பதை விளக்கி உரையாற்றினார்கள் ஒவ்வொரு தீ-க்கும் எந்த வகை ஃபயர் எக்ஸ்டிங்குஷர் பயன்படுத்த வேண்டும்? LPG கேஸ் சிலிண்டர் தீ விபத்துகள் நேரிட்டால் என்ன செய்ய வேண்டும்? வாகன தீ விபத்து பாதுகாப்பு நடைமுறை மின்கசிவு காரணமான தீயிலிருந்து எப்படி தப்பிக்கலாம்? தீ விபத்து நேரத்தில் உடனடி மீட்பு நடவடிக்கைகள் என்னென்ன செய்ய வேண்டும்.தீ விபத்தில் முதல்கட்ட உதவி (First Aid) நடைமுறைகள்.தீ தடுப்பு முன்னெச்சரிக்கைகள்.தீ விபத்து அவசர அழைப்பு எண் 101 பற்றிய விழிப்புணர்வு பயிற்சியைப் பற்றி தீயணைப்பு அதிகாரிகள் விரிவாக விவரித்தார்கள். மேலும் முதல் முறையாக தமிழ்நாட்டில் இவ்வளவு பெரிய அளவில் பொதுமக்களுக்கு நேரடியாக தீ பாதுகாப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. எந்த ஒரு தீ விபத்திலும் எடுத்து கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்து தெளிவுபடுத்திக் கொண்டு மக்கள் தீ விபத்து அச்சமின்றி பாதுகாப்பாக இருக்க உதவுவதே இதன் நோக்கம்" என்றனர். நிகழ்வில் கலந்துகொண்ட பொதுமக்கள் தங்கள் சந்தேகங்களை கேட்டறிந்து பயனடைந்தனர். மக்கள் பாதுகாப்பை முன்னிறுத்தி இத்தகைய பயிற்சி முகாம்கள் தொடர்ச்சியாக நடைபெறும் என்றும் அரவக்குறிச்சி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
Next Story