மெட்டாலா ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு பூஜை பக்தர்கள் சாமி தரிசனம்..

X
Rasipuram King 24x7 |11 Oct 2025 7:41 PM ISTமெட்டாலா ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு பூஜை பக்தர்கள் சாமி தரிசனம்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மெட்டாலா பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவிலில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு ஒவ்வொரு சனிக்கிழமையும் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்களான பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் போன்ற பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று பின்னர் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்று வருகிறது. அதன்படி புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story
