செங்குணம் ஏரியில் உள்ள கருவேலி மரங்களை அகற்ற வேண்டும்

செங்குனம் கிராமத்தில் குடிநீர் சாலை போக்குவரத்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை விரைவாக செய்து முடிக்க வேண்டும் என கிராம மக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது
பெரம்பலூர் வட்டம் செங்குணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அக்டோபர் 11 இன்று காந்தி ஜெயந்தி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பெரம்பலூர் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரேவதி தலைமை தலைமை வகித்தார். செங்குனம் கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். கிராம சபை கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக முதல்வர் மு க ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றிய நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் நேரலையில் பொதுமக்களுக்கு காண்பிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் கோவிந்தன் 2025 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான மாதத்தின் ஊராட்சி வரவு செலவுகளை வாசித்து காண்பித்து பொதுமக்களின் ஒப்புதல் பெற்றார். செங்குணம் ஏரியில் சீமை கருவேல மரம் அகற்றுதல், சுகாதாரம், குடிநீர், வசதி, பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை , மகளிர் சுய உதவி உட்பட பல பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் செங்குணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பள்ளிக்கு மேல்நிலைப் நீர்தேக்க தொட்டியில் இருந்து தண்ணீர் கிடைக்கும் படி தண்ணீர் தொட்டி அமைத்து தர கோருதல், செங்குணம் தொடக்கப் பள்ளி நுழைவு வாயில் எதிரே சாலையில் உள்ள வேகத்தடையில் பெயிண்ட் மூலம் வெள்ளை அடித்துத் தர கோருதல், செங்குணம் தொடக்கப்பள்ளி நுழைவு கேட் எதிரே உள்ள தண்ணீர் தொட்டியில் பயன்படுத்தி வீணாகும் நீர் பள்ளத்தில் தேங்கி நிற்காதவாறு நடவடிக்கை கோருதல், செங்குணம் கனரா வங்கி ஏடிஎம் இயந்திர மையம் பயன்பாட்டிற்கு கொண்டு வருதல், திருச்சி சென்னை நெடுஞ்சாலையில் பெட்ரோல் பங்க். ஒட்டிய திருமங்கலியம்மன் கோவில் ஓடையை செங்குணம் சிற்றம்பலம் சுவாமி கோவில் வடக்கே வரை சுத்தம் செய்து தர கோருதல் உட்பட பொதுமக்கள் பல கோரிக்கைகளை முன் வைத்தனர். இக்கூட்டத்தில் பெரம்பலூர் வட்ட வழங்கல் அலுவலர் (பொ) தனலெட்சுமி, செங்குணம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மதியழகன், தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் அமுதா, அருமடல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ரவி, செங்குணம் ஆரம்ப துணை சுகாதார நிலைய செவிலியர் கவிதா, அங்கன்வாடி பணியாளர்கள் செங்குணள் (மே) கண்ணம்மாள், செங்குணம் (கி) லலிதா, அருமடல் உமா, ஊராட்சி கணிணி இயக்குபவர் சரிதா, 100 வேலை திட்ட பணிதள பொறுப்பாளர்கள் மாணிக்கசெல்வி, தனம் , சத்தியா, மகளிர் சுய உதவி கணக்காளர் கெஜலெட்சுமி , கிராம உதவியாளர் அனிதா மற்றும் செங்குணம் குமார் அய்யாவு உட்பட ஊராட்சி பணியாளர்கள், கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story