எஸ்ஐயை வாளால் வெட்ட முயன்ற பிரபல ரவுடி கைது

எஸ்ஐயை வாளால் வெட்ட முயன்ற பிரபல ரவுடி கைது
X
தூத்துக்குடி மேட்டுப்பட்டி சுடுகாடு அருகே காவல் உதவி ஆய்வாளரை வாளால் வெட்ட முயன்ற பிரபல ரவுடி கைது
தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துராஜா தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, மேட்டுப்பட்டி சுடுகாடு அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த சந்தனராஜ் (22) என்பவரை பிடித்து விசாரித்தபோது அவர் வாளுடன் நின்று கொண்டிருந்தது தெரிய வந்தது,மேலும் விசாரணையின் போது முன்னுக்கு பின் முரணாக பேசியபடி தன்னைப் பிடிக்க வந்த காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துராஜை வெட்ட முயன்றுள்ளார். இதைத்தொடர்ந்து அவரை சுற்றி வளைத்த போலீசார் ஆயுதத்துடன் கைது செய்த தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டதில் இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு லூர்தம்மாள் புரத்தில் உள்ள சுடுகாட்டில் ஒருவரை உயிருடன் புதைத்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பது தெரிய வந்தது. எனவே தற்போது எதற்காக ஆயுதத்துடன் நின்றிருந்தார் என்பது குறித்து தாளமுத்து நகர் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story