குடிபோதையில் பெட்டி கடைக்கு தீ வைத்தவர் கைது

குடிபோதையில் பெட்டி கடைக்கு தீ வைத்தவர் கைது
X
பெட்டி கடைக்கு தீ வைத்தவர் கைது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் வெள்ளத்துரை மகன் சமுத்திரபாண்டி (52) சமுத்திரபாண்டி குருக்கள்பட்டியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். அதே ஊரைச் சேர்ந்தவர் செல்லத்துரை மகன் மாரி ராஜா (41)கூலி தொழிலாளி. சம்பவத்தன்று மாரி ராஜா குடிபோதையில் சமுத்திர பாண்டியன் பெட்டிக்கடையில் தீ வைத்துள்ளார். மாரி ராஜா பெட்டிக்கடையில் தீ வைத்தது அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது. இது குறித்த புகாரின் பேரில் சின்ன கோவிலாங்குளம் உதவி ஆய்வாளர் சஞ்சய் காந்தி வழக்குப்பதிவு செய்து கூலி தொழிலாளி மாரி ராஜாவை கைது செய்தனர்.
Next Story