போதையில்லா தமிழகம் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்

போதையில்லா தமிழகம் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்
X
வத்தலக்குண்டு பேரூராட்சி அலுவலகம் முன்பு போதையில்லா தமிழகம் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் - பள்ளி மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர்
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ரோட்டரி சங்கம் மற்றும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் போதையில்லா தமிழகம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது பேரூராட்சி அலுவலகம் முன்பு தொடங்கிய மாரத்தான் ஓட்டத்தை பேரூராட்சி மன்ற தலைவர் சிதம்பரம், நிலக்கோட்டை டிஎஸ்பி செந்தில்குமார் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர் முன்னதாக பள்ளி மாணவர்கள் தனிமனித ஒழுக்கம் குறித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர் ஆண்கள்,பெண்கள் என இரண்டு பிரிவாக தனித்தனியே நடந்த இந்த மாரத்தான் ஓட்டத்தில் வத்தலகுண்டு பட்டிவீரன்பட்டி மற்றும் சுற்று கிராமங்களை சேர்ந்த ஐந்து வயதிற்கு மேற்பட்ட 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்றனர் திண்டுக்கல் மற்றும் மதுரை சாலைகளில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் நடந்த இந்த மாரத்தான் ஓட்டம் முடிவில் ரோட்டரி உள் விளையாட்டு அரங்கில் முடிவடைந்தது.
Next Story