புதுக்கோட்டை: கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது

X
ஆலங்குடி பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக ஆலங்குடி மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கறம்பக்குடி அருகே கோட்டைக்காடு மாதா கோவில் தெருவை சேர்ந்த பிரான்சிஸ் ( 52) தோட்டத்தில் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்தார். போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 40 லி சாராயத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

