கோவை: துடியலூரில் அரவான் கோவில் திருவிழா !

X
கோவை, துடியலூரில் உள்ள 300 ஆண்டுகள் பழமையான அருள்மிகு அரவான் கோவில் திருவிழா விமர்சையாக நடைபெற்றது. ஊர்வலமாக சென்ற பக்தர்களுக்கு, அருகிலுள்ள பழமையான பள்ளிவாசலில் நேற்று மாலை தொழுகையை முடித்த இஸ்லாமியர்கள் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி மனிதநேயத்தை வெளிப்படுத்தினர். மத ஒற்றுமையின் சின்னமாக அமைந்த இந்த செயல் பக்தர்களை நெகிழச்செய்தது. திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

