திருச்செங்கோட்டில் தமிழ்நாடு கோவம்ச முன்னேற்ற நலச் சங்க முப்பெரும் விழா நடைபெற்றது 

திருச்செங்கோட்டில் நடைபெற்ற தமிழ்நாடு கோவம்ச முன்னேற்ற நலச் சங்க முப்பெரும் விழாவில் அனைத்து கோயில் பூசாரிகளுக்கும் 60 வயது முதிர்ந்ததும் ஓய்வூதியம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைவைத்து தீர்மானம் நிறைவேற்றம்
திருச்செங்கோட்டில் தமிழ்நாடு கோவம்ச முன்னேற்ற நலச் சங்க முப்பெரும் விழாநடைபெற்றதுநிகழ்ச்சியில் நாமக்கல்மாவட்ட கிளை துவக்க விழா, நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் பதவியேற்பு விழா சமுதாய குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்குதல் விழா ஆகியவை நடைபெற்றது. முப்பெரும் விழா நிகழ்ச்சிக்கு மாநிலத்தலைவர். சூர்யா அரிமா K.கலையரசன் தலைமை வகித்தார்நிறுவனத் தலைவர்  C.பழனிச்சாமி மாநிலப் பொருளாளர் B.கல்யாணசுந்தரம் மாநில மகளிர் அணிச்செயலாளர் மஞ்சுபூபதிஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில கல்வியாளர் அணி செயலாளர் V.செந்தில்முருகன்அனைவரையும் வரவேற்றார்.மாநில பொதுச் செயலாளர் தர்மலிங்கம் அனைவருக்கும் பதவிப்பிரமானம் செய்து வைத்தார்.  மாவட்டத் தலைவர் C.சரவணன் மாநில கொள்கை பரப்புச் செயலாளர்T.சுப்ரமணியன்,மாநில அமைப்பு செயலாளர் மனோகரன்,மாநில உயர்வட்ட குழு உறுப்பினர் தாமோதரன், மாநிலத் துணைத் தலைவர்மோகன்,மாநிலத் துணைச் செயலாளர் சுந்தரம்,மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் சங்கர் , தமிழ்நாடு கோவில் பூசாரிகள் நல சங்க சேலம் மேற்கு மாவட்ட தலைவர்இராஜா,கோவம்ச முன்னேற்ற நலச்சங்க மாநில மகளிர் அணி செயலாளர்தங்கமணி,மாநில இளைஞரணி செயலாளர் முத்துக்குமார்ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள் நிகழ்ச்சியின் முடிவில்மாவட்டச் செயலாளர் செந்தில்குமார்அனைவருக்கும் நன்றி கூறினார்.கூட்டத்தில் ஓபிசி உரிமையை மீட்டெடுப்போம் என்ற தலைப்பில் நூல்மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான நாட்காட்டி வெளியிடப்பட்டது.கூட்டத்தில்அனைத்து ஆண்டிப்பண்டார சாதியினரையும் சங்கத்தில் உறுப்பினராக்கி ஒன்றுபட்டு பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் அனைத்து கோயில் பூசாரிகளுக்கும் நல வாரியங்கள் உறுப்பினராக சேர்க்க படிவம் வழங்கிஉறுப்பினராக நடவடிக்கை எடுக்க வேண்டும்,60 வயது முடிந்த அனைத்து கோயில் பூசாரிகளுக்கும் அரசு ஓய்வூதிய தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் 50 பெண்கள் உட்பட 250க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story