ஈசநத்தம் பகுதியில் ரேசன் பொருட்கள் பெறுவதில் பொதுமக்கள் அவதி.
ஈசநத்தம் பகுதியில் ரேசன் பொருட்கள் பெறுவதில் பொதுமக்கள் அவதி. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகாவிற்கு உட்பட்ட ஈசநத்தம் பகுதியில் செயல்படும் நியாய விலை கடைகளில் ரேஷன் பொருட்களை பெறுவதற்கு இன்று அப்பகுதி பொதுமக்கள் சென்றனர். தற்போது மெட்ரிக் முறையில் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதால் குடும்ப அட்டைதாரர்கள் குடும்பத்தில் உள்ள எவரேனும் ஒருவர் தங்களது கை ரேகைகளை பதிவு செய்ய வேண்டிய சூழல் உள்ளது. அவ்வாறு பதிவு செய்யும்போது சர்வர் சரியாக இயங்காத தால் கைரேகை பதிவு ஆவதில் மிகுந்த தாமதம் ஏற்பட்டது. இதனால் காலை முதல் மதியம் வரை நீண்ட நேரம் காத்திருந்து முதியவர்கள் ரேஷன் பொருள்களை பெறும் சூழல் ஏற்பட்டது. காலையில் தொடங்கி மதியம் வரை 10 நபர்களுக்கு மட்டுமே ரேசன் பொருட்களை இதனால் விநியோகிக்க முடிந்தது. வயதானவர்கள் இதனால் நீண்ட நேரம் ரேஷன் பொருட்களை பெறுவதில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. தமிழக அரசு முதியவர்கள் ரேஷன் பொருட்களை பெறுவதில் சிரமம் இருந்தால் அவர்களுக்கு வீடு தேடி கொண்டு சென்று ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் தாயுமானவர் திட்டம் அறிமுகம் செய்த பிறகும் கூட இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர். ஈசநத்தம் பகுதியில் மட்டுமல்ல பெரும்பாலான கூட்டுறவு பண்டகசாலைகளில் இதே போன்ற நிலை நீடிப்பதால் பொதுமக்கள் ரேஷன் பொருட்களை பெறுவதில் மிகுந்த பின்னடைவு ஏற்பட்டுள்ளதால் மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் உடனடியாக இதற்கு உரிய தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story





