கிராமசபா கூட்டத்தில் இலவச சட்ட விழிப்புணர்வு

கிராமசபா கூட்டத்தில் இலவச சட்ட விழிப்புணர்வு
X
குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம் ஊராட்சி அலுவலகத்தில் கிராமசபா கூட்டம் நடந்தது.
குமாரபாளையம் அருகே குப்பண்டாபாளையம் ஊராட்சி சார்பாக கிராம சபை கூட்டம் பள்ளிபாளையம் பி.டி.ஒ. சுரேஷ் தலைமையில் நடந்தது. குமாரபாளையம் வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பாக பேனல் லாயர் பிரகாஷ் மற்றும் பாஸ்கரன் இலவச சட்ட சேவைகள் குறித்து எடுத்துரைத்தனர். சட்ட பணி ஆணைக்குழு தன்னார்வலர்கள் வேல்முருகன், விடியல் பிரகாஷ் பங்கேற்று, சட்ட விழிப்புணர்வு பற்றிய விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கினார்கள். குடிநீர் டேங்க், வடிகால், தார்சாலை உள்ளிட்ட தேவைகள் குறித்த மனுக்களை பொதுமக்கள் கொடுத்தனர். மக்கள் நீதி மய்யம் சார்பில் மகளிரணி நிர்வாகிகள் சித்ரா, உஷா, மல்லிகா பங்கேற்று தமிழக அரசின் 6 கோடி பனை விதைகள் நடும் திட்டம் குறித்தும், தினமும் பனை விதைகளை சேகரித்து, வனத்துறை உள்ளிட்டவர்களுக்கு வழங்கி வருவது குறித்தும், பனை விதைகளை நடுவது குறித்தும் கூறி, இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியும் கேட்டுக்கொண்டனர்.
Next Story