அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலைத் திருவிழா

X
Komarapalayam King 24x7 |12 Oct 2025 7:10 PM ISTகுமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலைத் திருவிழா போட்டிகள் நடந்தது.
குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலை திருவிழா கல்லூரி முதல்வர் சசரவணாதேவி தலைமையில் நடந்தது. மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான பாட்டுப்போட்டி, கவிதைப்போட்டி,பேச்சுப்போட்டி மற்றும் பட்ஜெட் தாக்கல் செய்தல் ஆகிய போட்டிகள் நடைபெற்றன. இவ்விழாவுக்கு நடுவர்களாக பேராசிரியர்கள் முரளிதரன், ஜெயவேல், உள்பட பலர் பங்கேற்றனர். சிறந்த முதல் மூன்று போட்டியாளர்களை தேர்ந்தெடுத்தனர். வணிகவியல் துறை இணை பேராசிரியர் ராமகிருஷ்ணன் ஒருங்கிணைத்து நடத்தினார். மாணவ, மாணவியர் பெருமளவில் பங்கேற்றனர்.
Next Story
