தீயணைப்பு நிலையம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தீயணைப்பு நிலையம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
X
குமாரபாளையம் தீயணைப்பு நிலையம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
குமாரபாளையம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் நிலைய அலுவலர் செங்கோட்டு வேலு தலைமையில் வாங்க கற்றுக்கொள்வோம்  என்ற தலைப்பில் விழிப்புணர்வு செயல்முறை விளக்க நிகழ்ச்சி நடத்தப்பட்டது.  பொதுமக்களுக்கு தீயணைப்பான்களை பயன்படுத்தும் முறை,  கேஸ் சிலிண்டர்  கசிவு அல்லது தீ விபத்து பற்றிய விழிப்புணர்வு,   மின்சார தீ விபத்து பற்றிய விழிப்புணர்வு, வாகன தீ விபத்து பற்றிய விழிப்புணர்வு, பட்டாசு வெடிக்கும் போது செய்வன, மற்றும் செய்யக்கூடாதவை பற்றிய விழிப்புணர்வு, ஆகிய செயல்முறை விளக்கம் கொடுக்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நகரின் பல்வேறு இடங்களில் இரு நாட்கள் நடந்தது. பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்று பயன்பெற்றனர்.
Next Story