கோவையில் தீபாவளி ஷாப்பிங் பரபரப்பு : கடை வீதிகளில் பொதுமக்கள் கூட்டம் – போலீசார் தீவிர கண்காணிப்பு!

X
தமிழகம் முழுவதும் வருகிற 20-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளியை முன்னிட்டு கோவையில் புத்தாடைகள், வீட்டு உபயோக பொருட்கள் வாங்க பொதுமக்கள் கடைவீதிகளில் பெருமளவில் குவிந்தனர். இதனால் ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு, பெரியக்கடை வீதி உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அலைமோதியது. திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும், சாதாரண உடையில் தனிப்படை போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story

