ஆழியாறு அணையில் மத்திய ரிசர்வ் போலீசாருக்கு பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி !

ஆழியாறு அணையில் மத்திய ரிசர்வ் போலீசாருக்கு பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி !
X
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு ஆழியாறு அணையில் மத்திய ரிசர்வ் போலீசாருக்கு வெள்ளப் பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி.
கோவை அருகே தொப்பம்பட்டியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை பயிற்சி கல்லூரியைச் சேர்ந்த போலீசாருக்கு, வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி ஆழியாறு அணையில் நடைபெற்றது. ஐ.ஜி. எஸ்.எல்.சி. குப் உத்தரவின் பேரில், கமாண்டன்ட் ஆண்டனி ஜென்சன் மற்றும் துணை கமாண்டன்ட் ஹரிகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர். டிரம் கேன் மற்றும் மரத்துண்டுகளை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட படகுகளில் நீரில் தத்தளிக்கும் நபர்களை மீட்பது, முதலுதவி சிகிச்சை அளிப்பது போன்ற செயல் விளக்கங்கள் அளிக்கப்பட்டது. மொத்தம் 89 போலீசாருக்கு 10 பேர் கொண்ட குழு இந்த மீட்பு மற்றும் முதலுதவி பயிற்சியை வழங்கியது. அணை பகுதியில் துப்பாக்கியுடன் மத்திய ரிசர்வ் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Next Story