பூண்டி வெள்ளியங்கிரி வனப்பகுதியில் ஆண் காட்டு யானை சாவு : வனத்துறை விசாரணை !

X
கோவை மாவட்டம் போளுவாம்பட்டி வனச்சரகத்தில் பயானைகள் அதிக அளவில் காணப்படுகின்றன. இந்நிலையில், வனத்துறை ஊழியர்கள் நேற்று முன்தினம் பூண்டி வெள்ளியங்கிரி வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒரு ஆண் காட்டு யானை இறந்து கிடந்தது கவனத்திற்கு வந்தது. சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறை அதிகாரிகள், உடனடியாக மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், கால்நடை மருத்துவர்கள் அழைக்கப்பட்டு, அந்த யானைக்கு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனையில், யானை இயற்கையாகவே இறந்தது என மருத்துவர்கள் தெரிவித்தனர். பிரேத பரிசோதனை முடிந்ததும், வனத்துறை விதிமுறைகளின்படி அந்த யானையின் உடல் அங்கேயே எரியூட்டப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறை மேலதிக விசாரணை நடத்தி வருகிறது.
Next Story

