பூட்டிருந்த வீட்டுக்குள் நகை பணம் திருட்டு

பூட்டிருந்த வீட்டுக்குள் நகை பணம் திருட்டு
X
மதுரை மேலூர் அருகே பூட்டி இருந்த வீட்டுக்குள் புகுந்து நகை பணம் திருடப்பட்ட சம்பவம் நடந்துள்ளது
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள தும்பைபட்டியை சேர்ந்த பஞ்சவர்ணம்( 60) என்பவர் நேற்று (அக்.11) காலை மாடு மேய்க்க சென்று விட்டு மதியம் வீட்டிற்கு திரும்பியபோது வீட்டிற்குள் இருந்த மர்ம நபர் பின்பக்க வாசல் வழியாக வெளியேறி அங்கு நின்றிருந்த காரில் ஏறி தப்பி சென்றுள்ளார் . இதை கண்ட பஞ்சவர்ணம் வீட்டுக்குள் பார்த்தபோது பீரோவில் இருந்த 4 பவுன் நகை மற்றும் ரூ. 50 ஆயிரம் திருடு போனது தெரிந்தது. இதுகுறித்து மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Next Story