லாரி கவிழ்ந்ததில் பெண் பலி

லாரி கவிழ்ந்ததில் பெண் பலி
X
மதுரை திருமங்கலம் அருகே செங்கல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததில் பெண் பலியானார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கிருஷ்ணாபுரத்திலிருந்து திருமங்கலம் பச்சைகோப்பன்பட்டிக்கு நேற்று (அக்.11) அதிகாலை செங்கல் லாரியை நாகமலை புதுக்கோட்டை டிரைவர் சக்திவேல்( 52)ஓட்டி வந்தார். சேறும், சகதியுமாக உள்ள அச்சம்பட்டி ரோட்டில் லாரி கவிழ்ந்ததில் செங்கல்கள் மீது அமர்ந்து வந்த மறவன்குளம் கவிதா (48) ராமக்காள்( 60) வெள்ளைத்தாய் (36) ஆகியோர் மீது செங்கல் கற்கள் விழுந்ததில் கவிதா உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
Next Story