போச்சம்பள்ளியில் பொதுமக்களிடையே தீ பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்.

X
கிருஷ்ணகிரி மவட்டம் போச்சம்பள்ளி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பாக பொதுமக்களுக்கு தீ பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் நடைபெறும் "வாங்க கற்றுக் கொள்வோம்" என்ற நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதில் தீ பாதுகாப்பு நட வடிக்கைகளை கற்பிக்கும் வகையில் தீயணைக்கும் முறைகள், தீ விபத்து ஏற்படாமல் தடுத்தல் மற்றும் பேரிடர் காலங்களில் மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களிலிருந்து மனிதர்கள் தங்களது உயிர்களையும், கால்நடைகளையும், பாதுகாப்பது குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.
Next Story

