தர்மபுரியில் இலவச குடல் நோய்க்கான மருத்துவ முகாம்

தர்மபுரியில் ரோட்டரி அறக்கட்டளை சார்பாக இலவச குடல் நோய்களுக்கான மருத்துவ ஆலோசனை முகாம்
கோவை ஜெம் மருத்துவமனை, தர்மபுரி மிட்டவுன் ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய குடல் சம்பந்தமான நோய்களுக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம் தர்மபுரி ரோட்டரி ஹாலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ரோட்டரி அறக்கட்டளை தலைவர் டிஎன்சி மணிவண்ணன், ரோட்டரி மாவட்ட கவர்னர் சிவசுந்தரம், ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர் இதில் குடல் நோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பாரத்குமார், & மருத்துவ குழுவினர் பொது மக்களுக்கு குடல் நோய் சம்பந்தமான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர். இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்
Next Story