ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் திருட்டு

X
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் ரயில் நிலையசாலை, மதிலகம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணதாஸ் (73).இவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர். நேற்று காலை இவர் வீட்டில் இருந்து எழுந்து மாடியில் உள்ள அறையில் சென்று பார்த்தபோது, அறை கதவு உடைக்கப்பட்டு, அங்கு உள்ளே இருந்த 2 பவன் நகைகள் திருடப்பட்டு இருந்தது. இது குறித்து கிருஷ்ணதாஸ் மாரத்தாண்டம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story

