மாவட்ட போட்டிகள் அமைச்சர் பரிசு வழங்கினார்

X
குளச்சலில் மாவட்ட அளவிலான ஆடவர், மகளிருக்கான கலைஞர் கைப்பந்து விளையாட்டுப் போட்டிகள் அண்ணா சிலை அருகே உள்ள மைதானத்தில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மேயர் மகேஷ், குளச்சல் தொகுதி எம்எல்ஏ பிரின்ஸ் தொடங்கி வைத்தனர். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 6 பெண்கள் அணி, 36 ஆண்கள் அணி என 42 அணிகள் பங்கேற்றன. மாலையில் வெற்றி பெற்ற அணியினருக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பரிசுகளை வழங்கினார்.
Next Story

