ஆற்றின் தடுப்பனையில் செடி கொடிகள் அகற்றம்

ஆற்றின் தடுப்பனையில் செடி கொடிகள் அகற்றம்
X
குழித்துறை
குமரி மாவட்டம்  குழித்துறை ஆற்றில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, செடி கொடிகள், ஆகாயத்தாமரைகள் அடித்து வரப்பட்டது. இதனால் தடுப்பனை பாலத்தில் இந்த செடி கொடிகள் குவிந்து பொதுமக்கள் நடந்து செல்ல பெரும் சிரமம் ஏற்பட்டது. நேற்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் பணியாளர்களை நிறுத்தி  அகற்றும் பணி துவங்கியது. நேற்று ஞாயிற்றுக்கிழமையுடன் இந்த பணி முழுமையாக முடிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. பணிகள் முடிந்த பிறகு பொதுமக்கள் செல்ல வசதியாக குறுக்கு சாலை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story